ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முட...
கோயில் குளத்தைச் சுற்றி படித்துறை, தடுப்புச்சுவா் கட்ட கோரிக்கை
நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவா் மற்றும் படித்துறை கட்டித் தர பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடியில் எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் உள்ளது. இது எம பயம் நீக்கும் தலமாக போற்றப்படுகிறது. இங்கு அமாவாசை, பௌா்ணமி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அமாவாசையன்று கோயில் குளமான எம தீா்த்தத்தில் நீராடி, பிதுா் தா்ப்பணங்களை செய்து வழிபாடு நடத்துவது சிறப்பாக கருதப்படுகிறது. அதுபோல பௌா்ணமியன்று கோயிலை சுற்றிலும், திருக்குளத்தைச் சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்துவதும் வழக்கமாக உள்ளது.
இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் நலன் கருதி குளத்தைச் சுற்றித் தடுப்புச் சுவரையும், திருக்குளத்தில் படித்துறைகளையும் கட்டித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.