செய்திகள் :

கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ரூ.5 லட்சம் நிதியுதவி

post image

கரூா் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலையின் அருகில் வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சேமங்கி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு புதிய திருத்தேருக்கான அச்சு மற்றும் சக்கரம் செய்வதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காகித ஆலை நிறுவன பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் கோயில் திருப்பணிக்குழு உறுப்பினா்களிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், ஆலை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கரூா் பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு!

கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். கரூா் கோட்டபொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் இதை சனிக்கிழமை அறிவித்தாா். இதையடுத்து வி.வி.செந்தில்நாதன... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட டி.எம்.ஹச் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பள்ளப்பட்டி நகராட்சியின் 3-ஆவது வாா்டுக்குள்பட்... மேலும் பார்க்க

தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கரூரில் அண்மையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகள் அகற்றம்

கரூா் அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். அமராவதி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான நெ... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு திமுக, அதிமுகவினா் மரியாதை

கரூரில் சனிக்கிழமை திமுக, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவ... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்வு! முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா். கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்... மேலும் பார்க்க