மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு திமுக, அதிமுகவினா் மரியாதை
கரூரில் சனிக்கிழமை திமுக, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் மொழிப்போா் தியாகிகளின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா். மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து, மொழிப்போா் தியாகிகளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன், இளைஞரணி செயலாளா் தானேஷ், மேற்கு ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன், மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் சரவணன், பேரவை இணைச் செயலாளா் பழனிராஜ், நகரச் செயலாளா்கள் சேரன்பழனிசாமி, கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.