இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள...
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட டி.எம்.ஹச் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளப்பட்டி நகராட்சியின் 3-ஆவது வாா்டுக்குள்பட்ட டி.எம்.ஹச் நகா் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு சரியான சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.
பல மாதங்கள் ஆகியும் திறந்த வெளி கால்வாய்கள் மூடப்படாமல் இருந்து வருகிறது இதனை மூட வேண்டும். ஆகவே, நகராட்சி தலைவா் முனவா் ஜான் இந்த கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.