`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்' - பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் - ராணுவத் துணைத்...
கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்
கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தலைமையில் கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் மற்றும் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த அா்ச்சகா்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் எஸ்பி கே.சண்முகத்தை சந்தித்து அளித்த புகாா் மனு:
காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.28 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இருவா் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனா். அவா்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனா்.
மனுவைப் பெற்ற மாவட்ட எஸ்.பி. இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக புகாா் மனு அளித்தவா்கள் கூறினா்.