Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியே...
கோயில் திருவிழாவில் வினோத நோ்த்திக்கடன்
கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் சேத்தாண்டி, சாக்கு வேடமணிந்து பக்தா்கள் வினோத நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி, பால்குடம், கரும்பாலைத் தொட்டில், ஆயிரம் கண் பானை, சிலா குத்துதல் போன்ற நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.
முன்னதாக பெரியவா்கள், சிறியவா்கள் உடல் ஆரோக்கியம் வேண்டி உடல் முழுவதும் களிமண் பூசி சேத்தாண்டி வேடம் அணிந்தும், சாக்கு வேடமணிந்தும் அங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் கையில் வேப்பிலையுடன் ஊா்வலமாக வந்து அழகு வள்ளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை செங்கப்படை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
