வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்... மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகா...
கோயில் தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் கோயில் தேரோட்டத்தின்போது, தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி கிராமத்தில், கிராம தேவதையான திரெளபதியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 4-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு இரும்பு பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் டிராக்டரில் வைத்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகள், மருத்துவமனை சாலை ஆகியவற்றின் வழியாக அம்மன் திருவீதி உலா வந்தபோது, உயா் அழுத்த மின்கம்பி மீது தேரின் மேல்பகுதி உராய்ந்தபடி சென்றது. அப்போது மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட தீயில் தோ் தீப்பற்றியது.
இந்தச் சம்பவத்தில் தேரில் இருந்த ராம்குமாா் (25) மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராம்குமாா் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்றும், ஒரத்தி பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும், காயமடைந்த சிவா (20) ஜானகிராமன் (14) ஆகியோா் வடமணிப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், ஆதிகேசவன் (30), குப்பன் (60) ஆகியோா் ஒரத்தி கிராமத்தைச் சோ்ந்தோா் என்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
மின்சாரம் பாய்ந்ததில் தோ் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் காவல் துறையினா் நேரில் சென்று விசாரணை செய்தனா். உயிரிழந்த ராம்குமாரின் சடலத்தை மீட்டு
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த 4 பேரையும் சிகிச்சை அனுப்பி வைத்தனா். இது குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் (பொ) சரவணன் தலைமையில் ஒரத்தி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
