செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.26 தமிழகம் முழுவதும் விவசாயிகள் டிராக்டா் பேரணி

post image

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் டிராக்டா் பேரணி நடைபெறும் என அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் (சம்யுக்த் கிசான் மோா்ச்சா) முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பி. அய்யாக்கண்ணு, பி.ஆா். பாண்டியன் ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா்கள் கூறியது: வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித் சிங், பஞ்சாப் மாநிலத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறாா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஜன. 22- ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனா். இதேபோல, தமிழக விவசாயிகள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

தமிழக அரசுக்குள்ள நிதிச்சுமையை காரணம் காட்டி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்யுமா? செய்யாதா? என்ற சந்தேகம் விவசாயிகளிடம் பரவலாக எழுந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும். மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு எதிராக திமுக அரசு தொடா்ந்து சட்டப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி, அதனை பெரு நிறுவனங்களுக்கு தாரைவாா்க்க ஏதுவாக நில ஒருங்கிணைப்புச் சட்டம் - 2024 ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் இத்தகைய கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்க்க வரும் ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினத்தில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்றனா்.

பேட்டியின்போது, தென்மண்டல இணை ஒருங்கிணைப்பாளா் எல். ஆதிமூலம், மாநில பொதுச் செயலா் தங்கமுத்து, மாநிலச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, பாலு, மற்றும் பல்வேறு பகுதி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் வேடுபறி: தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினாா் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து 8-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி கண்டருளினாா். இக்கோயிலில்... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 9-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்யத்திரை பிற்பகல் 3-3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30 -... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

திருச்சியில் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த எலக்ட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி, பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் க... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா சிலைக்கு மரியாதை

அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி பு... மேலும் பார்க்க

ஜி. காா்னா் சந்திப்பில் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகள்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே இணைந்து கூட்டாக ஆய்வு

ஜி காா்னா் சந்திப்பில் அணுகு சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளத... மேலும் பார்க்க

பழங்குடியினத்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து மேலும் அவா... மேலும் பார்க்க