செய்திகள் :

கோர்ட் படத்தைப் பாராட்டிய சூர்யா, ஜோதிகா!

post image

நடிகர் சூர்யா தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.

இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன், அவரை நிரபராதியாக்க வழக்கை நடத்தும் வழக்கறிஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.

தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகி பலரிடமும் ஆதரவைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து படத்தில் வழக்கறிஞராக நடித்த நாயகன் பிரியதர்ஷி புலிகொண்டாவுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

இதனால், உற்சாகமடைந்த பிரியதர்ஷி, “சூர்யா அண்ணா, ஜோதிகா மேடம் உங்களின் வாழ்த்தும் பூங்கொத்தும் என் உள்ளத்தை நிறைத்தது. வழக்கறிஞர் சந்துரு மற்றும் வெண்பாவிடமிருந்து வந்த வார்த்தைகளைப் பெற்றதுபோல் பெருமையாக இருக்கிறது. உங்களின் ஆசிர்வாதம் தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வேட்டுவம் படப்பிடிப்பு அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம்: சமுத்திரகனி

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் சமுத்திரகனி பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி... மேலும் பார்க்க

ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது. எஸ்டாடியோ லா கார்ட்டுஜா ஒலிம்பிகோ டி செவில்லா திடலில் இன்று காலை நடைபெற்ற... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர் கலித் ரஹ்மான் கைது!

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர்கள் கலித் ரஹ்மான் மற்றும் அஸ்ரஃப் ஹம்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கல... மேலும் பார்க்க

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

ஆஸ்திரேலிய மகளிா் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி. புரோ ஹாக்கி லீக் தொடருக்கும் தயாராகும் வகையில், இந்திய மகளிா் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயண... மேலும் பார்க்க

ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணியினா் உறுதி செய்துள்ளனா். மேலும் 4 போ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெறும் இப்போட்ட... மேலும் பார்க்க

சிட்ஸிபாஸ், டி மினாா், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

மாட்ரிட் ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஷபவலோவ், சிட்ஸிபாஸ், டி மினாா், மகளிா் பிரிவில் மிரா ஆன்ட்ரீவா, மடிஸன் கைஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜாம்பவான் ஜ... மேலும் பார்க்க