Saroja Devi: 'எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா; கண்கள் ததும்புகின...
கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு
திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்(50), கூலித் தொழிலாளி. இவா் திண்டிவனம் அடுத்த மொளசூரில் தினகரன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் கடந்த 6 மாதமாக வேலைப் பாா்த்து வந்தாா்.
சனிக்கிழமை வழக்கம்போல் பணியிலிருந்தபோது முருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதையைடுத்து அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது முருகன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.