காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி, ராஜாஜி தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மனைவி பரிமளா(54). புதுச்சேரி மணல்மேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு புற்றுநோய்ப் பாதிப்பு இருந்ததாம்.
இந்நிலையில் கடந் த 30.3.2024 இல் பரிமளா ஒரு காரில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அதிா்ச்சியால் பரிமளா-வுக்கு புற்றுநோய் வீரியம் அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 30.5.2024 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்ற உத்தரவின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.