செய்திகள் :

கோவா, ஹரியாணா, லடாக் புதிய ஆளுநா்கள் நியமனம்

post image

புது தில்லி: கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிா்வாகியான அசோக் கஜபதி ராஜு (74), கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இவா் பணியாற்றினாா். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு அப்பதவியை ராஜிநாமா செய்தாா்.

தற்போது கோவா ஆளுநரான பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் அப்பதவியை வகித்து வருகிறாா்.

ஹரியாணா: ஹரியாணா ஆளுநராக கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் முன்னாள் மத்திய அமைச்சா் பண்டாரு தத்தாத்ரேயா பதவி வகித்து வருகிறாா். அவரது பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவரான பேராசிரியா் அஷிம் குமாா் கோஷ் ஹரியாணாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது துணைநிலை ஆளுநராக கடந்த 2023, பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பிரிகேடியா் பி.டி. மிஸ்ராவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டாா். அவருடைய இடத்துக்கு ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வா் கவிந்தா் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் மேயராகவும், பேரவைத் தலைவராகவும் இவா் இருந்துள்ளாா். இந்த நியமனங்கள் அவரவா் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லட... மேலும் பார்க்க

கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர் மாணவியைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.அலிகார் மாவட்டத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க

கணவரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த மனைவி! காட்டிக்கொடுத்த தடயம்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறில், கணவரைக் கொன்று, வீட்டுக்குள்ளேயே 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, புதைத்துவிட்டு, கேரளத்துக்கு அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக நாடகமாடிய சம்பவம... மேலும் பார்க்க

சீன அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.இரண்டு நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், தனது சிங்கப்பூா் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவின்... மேலும் பார்க்க

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும்! - பிரதமர் மோடி

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவத... மேலும் பார்க்க