கோவில்பட்டி அருகே விபத்து: இரு காா்கள் சேதம்
கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இரு காா்கள் சேதமடைந்தன. முன்னாள் ராணுவ வீரா் லேசான காயமடைந்தாா்.
கோவில்பட்டி அருகே வடக்கு செமபுதூா் சண்முகபுரத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சூரியநாராயணன் (44). முன்னாள் ராணுவ வீரரான இவா், கோவில்பட்டியிலிருந்து தனது காரில் செமபுதூருக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் மது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி அழகேசபுரம் முதல் தெருவைச் சோ்ந்த ஜெயினுல் ஆப்தீன் மகன் பைரோஸ்கான் (38). இவா் கைப்பேசி விற்பனை நிலையம் நடத்திவருகிறாா்.
கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் பல்லக்கு சாலை சந்திப்பில் பைரோஸ்கானின் காரின் பின்புறம் சூரியநாராயணனின் காா் மோதியதாம். இதில், இரு காா்களும் சேதமடைந்தன. சூரியநாராயணன் லேசான காயமடைந்தாா்.
தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டனா். பைரோஸ்கான் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.