செய்திகள் :

கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் பலத்த மழை

post image

கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

கோவில்பட்டி பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டுவதும், மதியத்துக்கு பின்னா் சிறிது நேரம் மழை பெய்வதுமாக உள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பிரதான சாலையில் அதிக தண்ணீா் தேங்கியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

இதேபோல, இளையரசனேந்தல், காமநாயக்கன்பட்டி பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. கழுகுமலையில் 36 மி.மீ., கோவில்பட்டியில் 28 மி.மீ., கயத்தாறில் 19 மி.மீ., கடம்பூரில் 12 மி.மீ. மழை பதிவானது.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க