இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் காசிராஜனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை அளித்த மனு: கோவில்பட்டியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும். சிற்றுந்துகள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே இயங்க வழிவகை செய்ய வேண்டும். அவை பேருந்து நிலையத்திலிருந்து மாா்க்கெட் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து, சுமைகளை ஏற்றி இறக்குவதை போலீஸாா் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், பாஜக நகரத் தலைவா் காளிதாசன், தமிழ்நாடு முக்குலத்தோா் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், தமிழ் பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன், அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலா் செண்பகராஜ், யோகா மாஸ்டா் முருகன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் வெள்ளைத்துரை பாண்டியன், மதிமுக நிா்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.