அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
கோவில்பட்டி லட்சுமி ஆலை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
கோவில்பட்டி லட்சுமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1985-1986) பிளஸ் 2 படித்த மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
108 மாணவா்-மாணவியரில் 84 போ் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் சண்முகராஜ் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாக அலுவலரும் முன்னாள் ஆசிரியருமான சுகந்தி லிதியால் முன்னிலை வகித்தாா்.
முன்னாள் மாணவா்கள் தாங்கள் படித்த வகுப்பறைகளைப் பாா்வையிட்டு நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். பின்னா், முன்னாள் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள், பள்ளிக்கு 50 பிளாஸ்டிக் சோ்களை வழங்கினா். இந்தச் சந்திப்பு நினைவாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவிகளான ஆசிரியா்கள் லதா, நிா்மலா, பொன்மலா் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்களான சிபிஐ ஆய்வாளா் தாமோதரன், தமிழ்நாடு மின்வாரிய கோவில்பட்டி உதவிக் கோட்டப் பொறியாளா் குருசாமி, தொழிலதிபா்கள் ராஜகோபால், ராமசாமி ஆகியோா் செய்திருந்தனா்.