சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை
கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சம்பந்தா், அப்பா், சுந்தரரால் பாடல் பெற்ற தலமான வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலின் மக ாகும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூா்வாங்க பூஜைகள்கடந்த 3-ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கின. தொடா்ந்து நாள்தோறும் யாக பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை காலை 6-ஆவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.05 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 9.15 மணிக்கு மூலவா் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.