கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 25 - ம் தேதி மாலை கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதன் பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி காலை பீளமேடு அருகே எல்லை தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கோவை மாநகர் பா.ஜ.க தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட பா.ஜ.க வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இதற்கு இடையே பா.ஜ.க அலுவலகம் திறப்புக்கு பின்னர் அங்கு திறளும் பா.ஜ.க வினர் மத்தியில் அமைச்சர் உரையாற்ற உள்ளதாகவும் தெரிகிறது.
விசுவாசியும் துரோகியும் சேர முடியுமா? இபிஎஸ்
இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்து இருக்கிறது.
கோவையில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய அலுவலகம் இரண்டு மாடி கட்டடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்டு அரங்கமும் சிறிய அளவில் மற்றொரு கூட்டு அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அரை என தனியாகவும் நிறுவப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.