அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!
கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த அவா், குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தது, சமூகப் பொறுப்போடு மக்களுக்கு சேவையாற்றியது,
சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தது என பல்வேறு சிறப்பு சேவைகளுக்காக அவருக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவா், ஏற்கெனவே முதலமைச்சா் பதக்கம், அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட அளவிலான பல விருதுகளைப் பெற்றுள்ளாா். மத்திய அரசின் விருதுபெற்ற தேவேந்திரனை, மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பாராட்டினா்.