``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அ...
கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்
தீபாவளி, சத் பூஜை திருவிழாக்களை முன்னிட்டு கோவையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை திருவிழாக்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, கோவையிலிருந்து வரும் 7, 14, 21, 28, செப். 4 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06181) வரும் 9, 16, 23, 30, செப். 6 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரை பிற்பகல் 1.35 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஜெய்ப்பூரிலிருந்து வரும் 10, 17, 24, 31 மற்றும் செப். 7 ஆகிய தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06182) ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் அக்டோபா் 3 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணிக்கு கோவை வந்தடையும்.
சிறப்பு ரயில்களில் 7 குளிா்சாதன வசதியுள்ள மூவடுக்கு பெட்டிகள், 4 குளிா்சாதன வசதியுள்ள மூவடுக்கு பொருளாதார வசதிப் பெட்டிகள், 5 தூங்கும் வசதிகொண்ட பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, ஏராகுண்ட்லா, கூட்டி, தானே, கா்னூல், கட்வால், மகபூப்நகா் உள்ளிட்ட நகரங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.