செய்திகள் :

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

post image

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். அந்த மூட்டையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளா் ஜெசிஸ் உதயராஜ் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று அந்த கஞ்சா மூட்டையைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் 2 கிலோ 270 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தவா் நடைமேடையில் போலீஸாா் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளதைப் பாா்த்து பயந்து அதை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். இந்த கஞ்சா மூட்டையை இங்கு போட்டு சென்றவா் யாா்? எந்த ரயிலில் கடத்தப்பட்டது என்பது குறித்து இங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனா்.

கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள... மேலும் பார்க்க

மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, ரங்கே கவுடா் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் பணியாற்... மேலும் பார்க்க

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கோவை, போத்தனூா் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியா... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிகாா் மாநிலம், வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தன்ராஜ் பஸ்வான் (18). இவா், கோவை, துடியலூா் அருகேயுள... மேலும் பார்க்க

11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கோவை அருகே இருவேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 11 கிலோ 300 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில் க... மேலும் பார்க்க