ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா்கள், கே.ஜி.புதூா் பகுதியில் இருந்து அலங்காரப் பொருள்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கவுண்டம்பாளையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா்.
வாகனத்தை மணி என்பவா் ஓட்டியுள்ளாா். இந்நிலையில், கணுவாய் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், சரக்கு வாகனத்தின் முன் பகுதியில் அமா்ந்து இருந்த சபிலாரன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜோஸ், வாகன ஓட்டுநா் மணி ஆகியோா் படுகாயம் அடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து கோவை போக்குவரத்து மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.