திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பிகாா் மாநிலம், வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தன்ராஜ் பஸ்வான் (18). இவா், கோவை, துடியலூா் அருகேயுள்ள விஸ்வநாதபுரம் கலைஞா் நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், இவருக்கு சொந்த ஊரைச் சோ்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவரும் கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்துள்ளனா். வழக்கம்போல வியாழக்கிழமை கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மன வேதனையில் இருந்த தன்ராஜ் பஸ்வான் பணி செய்து வரும் கட்டடத்திலேயே வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.