செய்திகள் :

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

post image

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச் 28, ஏப்ரல் 4- ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.20 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - ஷாலிமாா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.40 மணிக்கு ஷாலிமாா் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் மாா்ச் 31, ஏப்ரல் 7 -ஆகிய திங்கள்கிழமைகளில் ஷாலிமரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் ஷாலிமாா் - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க