செய்திகள் :

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

post image

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேரத்தில் சின்னத்தம்பி யானை விளை நிலம், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.

சின்னத்தம்பி யானை

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை அந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். சின்னத்தம்பியை பிடிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

வனத்துறையால் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் அடைக்கப்பட்டது. அங்கு சின்னத்தம்பிக்கு கடந்த சில ஆண்டுகளாக கும்கி யானை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சின்னத்தம்பி யானை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரமடை பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை மற்றும் ஊருக்குள் புகுந்த மக்னா யானையை விரட்டும் நடவடிக்கைகளுக்கு சின்னத்தம்பி யானை கோவை அழைத்து வரப்பட்டது.

இந்நிலையில் அண்மை காலமாக தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் விளை நிலம், வீடுகள் பாதிக்கப்படுவதாகவும் 3 மனிதர்கள் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.

கோவை யானை

அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் யானையை விரட்ட டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சுயம்பு மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அந்த இரண்டு யானைகளும் மஸ்த் (மதம்) காலகட்டத்தால் மீண்டும் டாப்ஸ்லிப் அழைத்து செல்லப்பட்டன. இதையடுத்து தடாகம் பகுதியை சுற்றி உலா வரும் காட்டு யானையை விரட்ட, டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி யானை

இதே தடாகம் பகுதியில் வைத்துதான் சின்னத்தம்பி கடந்த 2019-ம் ஆண்டு பிடிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே பகுதிக்கு சின்னத்தம்பி கும்கி யானையாக வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டி: ஈரோட்டில் பார்வையாளர்களை கவர்ந்த காளைகள்!

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்க... மேலும் பார்க்க

நாகர்கோவில்: குப்பைக் கிடங்கில் தீ... சாலையில் புகை; மூச்சுத்திணறி மக்கள் கடும் அவதி..| Photo Album

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ..நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ.. மேலும் பார்க்க

1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு - கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள 'ஷெல் இக்கோ-மாரத்தான் - ஆசியா பசிபிக் 2025' எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்த... மேலும் பார்க்க

வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?

வனப்பரப்பும் வனவிலங்குகளும் நிறைந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின்... மேலும் பார்க்க

கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!

வனங்களும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் காய்கறி , இறைச்சி உள்ளிட்ட உணவு கழிவுகளால... மேலும் பார்க்க

பந்திப்பூர்: காய்கறி லாரிகள் மட்டும் டார்கெட்; தெறிக்கும் ஓட்டுநர்கள், திணறும் வனத்துறை

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன முதுமலை முச்சந்திப்பு வனப்பகுதிகள். தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய புலிகள் காப்பகங்கள், கேரளாவின்... மேலும் பார்க்க