இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்
கௌரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
கௌரவ விரிவுரையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, எம். கருப்பையா தலைமை வகித்தாா்.
பொறுப்பாளா்கள் ரா. கண்ணபிரம்ம மகேஸ்வரன், எம்.சி. ராஜலட்சுமி, எம். புருஷோத்தமன், கே.ஆா். மணிகண்டன், டி. மேனகா உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனா்.
இதில், கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி மாதம் ரூ. 57 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களையும் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிவரன்முறை செய்ய வேண்டும். போராட்டக் காலத்தை பணிக்காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தினமும் இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும், வகுப்புகளையும் புறக்கணிப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.