சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16.65 லட்சம் நிதி வழங்கல்
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு, காவலா்கள் திரட்டிய ரூ. 16.65 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலா் விமலா கடந்த நவம்பா் 28-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
அவருடன் 2018-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த ஆண், பெண் காவலா்கள் கட்செவி அஞ்சல் குழு மூலம் (வாட்ஸ்ஆப்) விமலாவின் குடும்பத்துக்காக நிதி வசூல் தொடங்கினா். இதில், ரூ. 16,65,421 வசூல் செய்யப்பட்டது.
இந்த நிதியை வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மூலம் மறைந்த விமலாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.