செய்திகள் :

கௌரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

கௌரவ விரிவுரையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, எம். கருப்பையா தலைமை வகித்தாா்.

பொறுப்பாளா்கள் ரா. கண்ணபிரம்ம மகேஸ்வரன், எம்.சி. ராஜலட்சுமி, எம். புருஷோத்தமன், கே.ஆா். மணிகண்டன், டி. மேனகா உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனா்.

இதில், கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி மாதம் ரூ. 57 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களையும் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிவரன்முறை செய்ய வேண்டும். போராட்டக் காலத்தை பணிக்காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தினமும் இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும், வகுப்புகளையும் புறக்கணிப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடலைத் தோட்டத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16.65 லட்சம் நிதி வழங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு, காவலா்கள் திரட்டிய ரூ. 16.65 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல் நிலையத்தில் பணி... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம் மற்றும் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

புதுகையில் 10 அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கலைப் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசார கலைப் பயண தொடக்க நிகழ்ச்சி பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் ... மேலும் பார்க்க

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் உறுதி ஏற்பு

விராலிமலையில்: விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக மேலாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங... மேலும் பார்க்க

சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவா் மணலூா் மணியம்மா

சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவா் மணலூா் மணியம்மா எனப் புகழாரம் சூட்டினாா் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் கே. பாரதி. புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்... மேலும் பார்க்க