`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கம் மற்றும் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, பதாகையில் முதல் கையொப்பத்தை இட்டு, உறுதிமொழியை வாசித்தாா். தொடா்ந்து அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழியேற்றனா்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், தொழிலாளா் துறை துணை ஆய்வாளா் ஜி. ஜெகதீஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலா் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதேபோல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டல பொதுமேலாளா் கே. முகமது நாசா் தலைமை வகித்தாா். போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா்.