"முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - ட...
சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்
முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-3, 6-4 என்ற செட்களில் பிரிட்டனின் கேட்டி போல்டரை வீழ்த்தினாா். உள்நாட்டு வீராங்கனையான காலின்ஸ் 5-7, 4-6 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மெக்தா லினெட்டால் தோற்கடிக்கப்பட்டாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு போலந்து வீராங்கனை மெக்தலினா ஃபிரெச் 6-2, 6-4 என, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை எளிதாக வெளியேற்றினாா். கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்டை சாய்த்தாா்.
நகாஷிமா, ஒபெல்கா வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-3, 6-4 என்ற செட்களில், சக அமெரிக்கரான ஈதன் கின்னை வீழ்த்தினாா்.
ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகா 6-4, 5-7, 6-1 என்ற வகையில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை வெளியேற்றினாா். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை தோற்கடித்தாா்.
பிரிட்டனின் கேமரூன் நோரி 6-3, 7-6 (7/4) என சக நாட்டவரான பில்லி ஹாரிஸை வெல்ல, ஹங்கேரியின் ஃபாபியான் மரோஸான் 7-5, 6-1 என பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியை வீழ்த்தினாா்.