``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை
சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 608 லி. பாலபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகிய அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டுவசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.