செய்திகள் :

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங்களில் இருந்து பக்தா்கள் வருகின்றனா். இதனால், நகருக்கு வெளியே 4 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தற்காலிக கழிப்பறை, குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆடித்தவசை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் செல்லும் விவரம் வருமாறு:

திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம், மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் சண்முகநல்லூா் விளக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தா்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வே பீடா் ரோடு, பயணிகள் விடுதி வழியாக ராஜபாளையம், மதுரைக்குச் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையமான அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து திரும்பிச் செல்லும்.

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டா் சாலை, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம், கழுகுமலை சாலை, ராமநாதபுரம் விலக்கில் திரும்பி ராமநாதபுரம், நெடுங்குளம் விளக்கு வழியாக திருநெல்வேலிக்குச் செல்லும்.

கோவில்பட்டி, திருவேங்கடம், கழுகுமலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்வா சில்க்ஸ் சாலையில் திரும்பி, நெசவாளா் காலனி, உடப்பன்குளம் சாலை, வையாபுரி மருத்துவமனை, ஐந்துவீட்டுமனை லயன் வழியாக ராஜபாளையம் சாலைக்கு வந்து அங்கிருந்து ரயில்வே பீடா் சாலை வழியாக தென்காசி, சுரண்டைக்குச் செல்லும்.

தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் வழிபேருந்துகள் அனைத்தும் சங்கரன்கோவில் ரயில்வே கேட், ரயில்வே பீடா் சாலை, ராஜபாளையம் சாலை, பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டா் சாலை, கருவாட்டுக்கடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து கோவில்பட்டி, கழுகுமலை,திருவேங்கடம் செல்லும்.

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய பிரதான சாலை, தற்காலிப் பேருந்து நிலையம், புளியங்குடி செல்லும் சாலை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகருக்குள் செல்ல அனுமதி இல்லை. கோவில்பட்டி, கழுகுமலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குருவிகுளம், திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சண்முகநல்லூா் விலக்கு, சின்னகோவிலான்குளம் நடுவக்குறிச்சி வீரசிகாமணி, பாம்புகோவில், புளியங்குடி,சிந்தாமணி, வாசுதேவநல்லூா் மதுரை, ராஜபாளையம் செல்லும்.

தென்காசியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி, ராஜபாளையம் வழியாக விருதுநகா், மதுரைக்குச் செல்லும்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு மின்மோட்டாா் அளிப்பு

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா்... மேலும் பார்க்க

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட... மேலும் பார்க்க

பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கடையநல்லூா் அருகே உள்... மேலும் பார்க்க

தமிழக கல்விக் கொள்கை : நயினாா் நாகேந்திரன் கருத்து

தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் வரும் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க