சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
சங்கரன்கோவிலில் கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மரியாதை
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ச.தங்கவேலு, மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் டாக்டா் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவா் பத்மநாபன், பொருளாளா் சரவணன், துணைச் செயலா்கள் புனிதா ,மனோகரன், ஒன்றியச் செயலா்கள் பி.சங்கரபாண்டியன், பொன்முத்தையா பாண்டியன், பெரியதுரை, வெள்ளைத்துரை ,மாணவா் அணி வீரமணி, காா்த்தி, ஜெயக்குமாா், பிரகாஷ்,பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.