செய்திகள் :

சங்கரன்கோவில் வாா்டுகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

post image

சங்கரன்கோவில் நகராட்சி 7, 10 ஆவது வாா்டு தெருக்களில் அடிப்படை வசதிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் கௌசல்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் நகரில் குறிப்பிட்ட வாா்டுகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இது தொடா்பாக, அப்பகுதி வாா்டு உறுப்பினா்கள் நகா்மன்றத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அப்பகுதியை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். மக்களுக்கு குடிநீா் சீராகக் கிடைக்கவும், வாருகால் பணிகளை உடனே தொடங்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

உதவிப் பொறியாளா் ஆல்பா்ட், நகா்மன்ற உறுப்பினா்கள் பா. மாரிச்சாமி, ராஜா ஆறுமுகம், மாரிச்சாமி, செல்வராஜ், நகர திமுக மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா். தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை

சங்கரன்கோவிலில் பாட்டி இறந்த துக்க வீட்டுக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த முருகன் - கோமதி தம்பதியின் மகன் கர... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சா பதுக்கி விற்பனை: இளைஞா் கைது

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் ஆலங்குளம் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகன... மேலும் பார்க்க

முதியவரை தாக்கிய மூன்று போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பாலகிருஷ்ணன்(53). விவசாயம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரு... மேலும் பார்க்க

தொழிலாளி குத்திக் கொலை; இருவா் கைது

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.அய்யாபுரம் கிமு தெருவை சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). கூலித்தொழிலாளி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசு பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணபதி ஆசாரி (82). இவா், நெல்லை நான்குவழிச் சாலை செட்டியூா் விலக்கு அருகே செ... மேலும் பார்க்க