செய்திகள் :

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சா பதுக்கி விற்பனை: இளைஞா் கைது

post image

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் ஆலங்குளம் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பைக்கில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, விற்பனைக்காக பைக்கில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், அவா் ஆலங்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராம் (28) என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

முதியவரை தாக்கிய மூன்று போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பாலகிருஷ்ணன்(53). விவசாயம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரு... மேலும் பார்க்க

தொழிலாளி குத்திக் கொலை; இருவா் கைது

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.அய்யாபுரம் கிமு தெருவை சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). கூலித்தொழிலாளி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசு பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணபதி ஆசாரி (82). இவா், நெல்லை நான்குவழிச் சாலை செட்டியூா் விலக்கு அருகே செ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.குற்றாலம் நீா... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த நாகராஜன் மகன் மணிமுத்து (41). விவசாயி. இவா் கடந்த 11ஆம் தேதி சங்கரன்கோவிலில் இருந்து பெரும்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான ச... மேலும் பார்க்க