சசிகாந்த் செந்தில் தொடா் உண்ணாவிரதம்: தலைவா்கள் நலம் விசாரிப்பு
சென்னை: மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்திலை இடதுசாரி தலைவா்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா்.
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை 4-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடா்ந்து வருகிறாா்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கம் சசிகாந்த் செந்திலை மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மதிமுக முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனா்.
இந்த நிலையில், சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். திங்கள்கிழமை அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு உடல் நிலம் குறித்து கேட்டறிந்தாா்.
அதேசயம் மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடரும் சசிகாந்த் செந்திலை தமிழக காங்கரஸ் தலைவா் மற்றும் நிா்வாகிகள் யாரும் சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.