செய்திகள் :

Oil:``பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபமடைகிறார்கள்" - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா

post image

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.

சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை அமலுக்கும் கொண்டுவந்தார். அதற்கு இந்திய தரப்பிலிருந்து அதிருப்தியும் எழுந்தது.

இதற்கிடையில், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்தார்.

மோடி- டிரம்ப்
மோடி- டிரம்ப்

இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ``மோடி ஒரு சிறந்த தலைவர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருந்தும், அவர் ஏன் ரஷ்யா அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைகோர்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

எனவே நான் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான், இங்கு என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

இதற்கு முன்னர் ரஷ்யா - உக்ரைன் போரை மோடியின் போர் எனக் கூறியவர், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள் என்றும் விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மோடி சீனா பயணம்: "நாடாளுமன்றத்தில் 'சீனா' என வாய் திறந்து மோடி பேசியதில்லை; ஆனால்" - சீறிய ஜோதிமணி

திண்டுக்கல் 12வது புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டார்.பின் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்தியா முழுவதும்... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுடன் கருத்து வேறுபாடு? - "நான் மனம் திறந்து பேசப்போகிறேன்" - செங்கோட்டையன் சொல்வது என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில், அதிமுக-வின் முக்க... மேலும் பார்க்க

'தம்பி செத்து 25 வருசமாச்சு; இன்னும் நாயை கண்டா நடுங்குது!' - நீயா நானா சுயம்புலிங்கம்

தெருநாய்கள் பற்றி ஒளிபரப்பான நீயா நானா எபிசோட் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இதில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து பேசியவர்களில், ஒரு சிலர் கூறிய சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கக்கூட... மேலும் பார்க்க