நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
சசிகுமாரின் ஃபிரீடம் படத்தின் அப்டேட்!
டூரிஸ்ட் ஃபேமலி வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக அடுத்தடுத்த பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
அவரது நடிப்பில் சமீபத்தில் கருடன், நந்தன் படங்கள் கவனம் ஈர்த்தன.
டூரிஸ்ட் ஃபேமிலி மே.1ஆம் தேதி வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் சசிகுமார் நடித்து முடித்துள்ளார்.
சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை சமீபத்தில் வெளியானது.
குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழகத்திலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலியும் இலங்கைத் தமிழர்கள் குறித்த படமாக இருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் புதிய அப்டேட் மே.9ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
