சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் சாய் சுதர்சன் 504 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக 500 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்திய சாய் சுதர்சன் சச்சின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பாக சச்சின் 44 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது, சாய் சுதர்சன் இதை வெறும் 35 இன்னிங்ஸில் செய்திருக்கிறார்.
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டுமென சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள் அடித்தவர்கள்
சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 35 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 44 இன்னிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) - 44 இன்னிங்ஸ்
ஐபிஎல் இதற்காக சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனைக்காக பலரும் சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
♂
— IndianPremierLeague (@IPL) May 2, 2025
Fastest to 1️⃣5️⃣0️⃣0️⃣ #TATAIPL runs ✅
Sai Sudharsan goes back after a breathtaking 48(23)
Updates ▶ https://t.co/u5fH4jQrSI#GTvSRHpic.twitter.com/kAOaK1eq3L