சச்சின் மறுவெளியீட்டு போஸ்டர்!
நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
காதல் திரைப்படமாக உருவான இது, அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டதுடன் ரசிக்கவும்பட்டது.
இதையும் படிக்க: விக்ரம் பிரபுவின் புதிய படம்!
இந்தாண்டுடன் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சச்சின் படத்தை 2025 ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் எஸ். தாணு தெரிவித்திருந்தார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/nlqd3t1f/GjfaVBRWoAAe7f.jpg)
இந்த நிலையில், மறுவெளியீட்டுக்கான புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
சச்சின், 2002 இல் வெளியான நீத்தோ (Neetho) என்கிற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.