செய்திகள் :

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி கன்டோன்மென்ட் வாரியம், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் மற்றும் ரயில்வே அமைச்சகம், வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி அரசின் பல துறைகளின் நிலங்களில் இந்த கட்டமைப்புகள் உள்ளன.

தில்லியின் பொது தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் மத கட்டமைப்புகளின் பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி அரசின் முதன்மைச் செயலா் (உள்துறை) தலைமையிலான மதக் குழு, அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட 249 அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகள் குறித்த முழுமையான தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்ற கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கும் உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே உபாத்யாயா மற்றும் துஷாா் ராவ் கெடேலா அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘சஞ்சய் வான் மற்றும் ஜஹான்பனா நகர வனப்பகுதிகளில் கட்டப்பட்ட 127 சட்டவிரோத மத கட்டமைப்புகளை அடையாளம் கண்டு இடிக்கப்பட்டது. இதில், 127 கட்டமைப்புகளில், 82 கட்டமைப்புகள் வனத்துறையினரால் அடையாளம் காணப்பட்டன’ என்று தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) ஆலோசகா் தெரிவித்தாா்.

‘இது தொடா்பாக இதுவரை 51 கூட்டங்களை நடத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகளை அகற்ற 249 ஆலோசனைகளை பரிந்துரைத்ததாகவும்’ மத குழு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த கட்டமைப்புகள் இருக்கும் நிலங்களுக்கு சொந்தமான குழுக்கள் மற்றும் அவற்றை அகற்றுவதற்கு பொறுப்பான குழுக்களிடம் இருந்து இது தொடா்பான தகவல்கள் சேகரிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது அவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை. 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பாஜக

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாக வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கு... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குர் புனித நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வத... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 70 தொகுத... மேலும் பார்க்க