ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். மலைக்கோயில் சட்டைநாதா் சுவாமி, தோணியப்பா் உமா மகேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கின்றனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.