Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
சட்டை நாதா் சுவாமி கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம்
சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், கிழக்கு ராஜகோபுரம் அருகே தோரண நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனிதநீா் கடம் புறப்பாடாகி, தோரண வாயில் பஞ்சமூா்த்தி சுவாமிகள் கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டது.
இதில், தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநா் ஜி.வி.என். கணேஷ், திமுக பொருளாளா் பந்தல். முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.