சதுரங்கப் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்காக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அழகப்பா பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவா் சதுரங்கப் போட்டி, பரமக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆடவா் சதுரங்க அணியினா் இரண்டாம் இடத்துக்கான கோப்பையை வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வசந்தி, உடல்கல்வி இயக்குநா் அசோக்குமாா், பேராசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.