செய்திகள் :

சத்தீஸ்கரில் நக்சல் கமாண்டர் சுட்டுக்கொலை! மற்றொருவர் பிடிபட்டார்!

post image

சத்தீஸ்கரின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவரும் கமாண்டருமான மணிஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கரில் நக்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் ஒரே நாளில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று(ஞாயிறு) இரவு முதல் இன்று(திங்கள்) காலை வரை லதேஹர் மாவட்டத்தில் நக்சல்கள் இயங்கும் முக்கிய இடமான டௌனா-கரம்காட் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் இயக்கத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மிகவும் தேடப்பட்ட நக்ஸல் இயக்கத்தின் முக்கிய கமாண்டர் மணிஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் மற்றொரு முக்கிய நக்சல் தீவிரவாதியாக குந்தன் கர்வார் என்பவரை போலீசார் பிடித்தனர். எக்ஸ்95 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பங்குச் சந்தையில் சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி நிதிப் பத்திரங்கள்!

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க