Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக்மெட்லா கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது கோப்ரா பிரிவினர் மற்றும் உள்ளூர் காவலர்கள் இணைந்து இந்த பகுதியை சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஜங்லா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெல்சார் கிராமத்தில் மேலும் 6 பேரும், அதேநேரத்தில் கண்டகர்கா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் பாதுகாப்புப் படையினரின் தனித்தனி கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டன.
கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து டிபன் குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், மின்சாரக் கம்பிகள், பேட்டரிகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிற பொருள்கள் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நக்சலைட்கள் 19 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் ஆவர்.