கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
சபரிமலைக்கு இணைந்து சென்ற கார்த்தி, ரவி மோகன்!
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.
தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

தற்போது, கார்த்தி வா வாத்தியார் வெளியீட்டிற்காகவும் ரவி மோகன் ஜீனி வெளியீட்டுகாகவும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இருவரும் இணைந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கார்த்தி தற்போது சர்தார் - 2 படத்திலும் ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: என் நிலையைக் கண்டு கமல் கண்கலங்கினார்: சிவராஜ்குமார்