செய்திகள் :

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

post image

பத்தனம்திட்டை : சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க அங்கி, மலை மேல் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டது.

திருவிதாங்கூர் அரச பரம்பரையால் ஐயப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை காலத்தில் தங்க அங்கி சாத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று(டிச. 25) ஐயப்ப சுவாமிக்கு 453 சவரன் எடை கொண்ட தங்கத்திலான அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. அப்போது சரண கோஷம் முழங்க பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க கவசம் ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க கவசம், மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

அந்தவகையில், நிகழாண்டு மண்டல பூஜை வியாழக்கிழமை (டிச. 26) நடைபெறும் நிலையில், தங்க அங்கி ஊா்வலம் ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஊா்வலத்தில் பக்தா்கள், திருவிதாங்கூா் தேவஸ்வம் (டிடிபி) அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இந்த ஊா்வலம் புதன்கிழமை (டிச. 25) பிற்பகலில் பம்பை கணபதி கோயிலை வந்தடைந்தது. மாலை சந்நிதானத்தை (சபரிமலை கோயில் வளாகம்) சென்றடைந்தது.

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

2024: லாபம் அளித்த முதல் 7 நிறுவனப் பங்குகள்!

2024 ஆம் ஆண்டின் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் அமைந்தது. குறிப்பாக, நவம்பர் முதல் டிசம்பர் வரையில் பெரும்பாலும் சரிவையே கொண்டிருந்தது. இருப்பினும், சில நிறுவனங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக... மேலும் பார்க்க

8 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து கொலை!

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர் கொலை!

மகாராஷ்டிரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவியைக் கண்டித்த கணவரை மனைவி கொலை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.புணேவில் பாஜக எம்.எல்.சி.யான யோகேஷ் திலேக் என்பவரின் மாமா சதீஷ் வாக் (51), டிச... மேலும் பார்க்க

ஹிந்தி நடிகருக்கு முதல்வர் பதவியா?

ஹிந்தி நடிகர் சோனு சூட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட், பொது மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்த... மேலும் பார்க்க