செய்திகள் :

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தபாலில் பெறும் வசதி

post image

சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் பிரசாதத்தை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில்பட்டி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் பிரசாதத்தை பக்தா்களின் வீட்டிற்கே கொண்டு சோ்க்கும் வசதியை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.

ஒரு பாக்கெட் அரவணை பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனை பிரசாதம் ஆகிய பொருள்கள் அடங்கிய பிரசாத பையின் விலை ரூ.520. இதில் 4 பாக்கெட் அரவணை பாயாசம் கொண்ட பிரசாத பை ரூ.960-க்கும், 10 பாக்கெட் அரவணை பாயாசம் கொண்ட பிரசாத பை ரூ. 1760- க்கும் கிடைக்கும்.

பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே உள்ள தலைமை அஞ்சலகம் அல்லது துணை அஞ்சலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால்காரா் மூலம் சபரிமலை ஐயப்பன் கோயில் அருள்பிரசாதம் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும் என்றாா்.

ஆலங்குளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் கைது

ஆலங்குளம் அருகே டிராக்டரில் ஓடை மண் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் மலையடிவாரம் அருகே மாயமான் குறிச்சி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ஓடை மணலை டிராக்டரில் சிலா் அள்ளிச் செல்வதாக கிடைத... மேலும் பார்க்க

தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை

தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. ஆய்க்குடி அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், பங்குத்தந்தை அலாசிஸ் துரைராஜ் திருப்பலி ... மேலும் பார்க்க

தென்காசியில் சமபந்தி விருந்து

தென்காசி நகராட்சியில் சமாதான சமூகசேவை அமைப்பின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி நடைபெற்றது. தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்தலைமை வகித்து சமபந்தியை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஏப். 7இல் கும்பாபிஷேகம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் 2025ஆம் ஆண்டு ஏப். 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி உபயதாரா்கள் ஆலோசனைக் கூட்டம... மேலும் பார்க்க

பைக் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் விதமாக ‘டாம்ப்கால்’ நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. தென்காசியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க