சபரிமலை சீசன்: ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோட்டில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு டிச.1 முதல் ஜன.26 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 08553) இயக்கப்படும். ஸ்ரீகாகுளத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 08554) இயக்கப்படும். இதில் 7 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சம்பல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேனிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூா் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.